அஸ்திவாரத்தை இப்பவே போட்ட தவெக!
|
"எம்ஜிஆர் சிலைக்கு மாலை போட்டு, அதிமுகவின் ஓட்டுகளைக் குறிவைக்கிறார்கள்.. இதை பார்த்துகிட்டு எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.. அன்று விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என்று சொன்னதுமே, ஜெயலலிதா எப்படி கொதித்தெழுந்தார்? ஆனால் இன்றைக்கு எடப்பாடி அமைதியாக இருப்பது அதிமுக தொண்டர்களை கொதிப்படைய செய்துள்ளது" என்று கேள்வி எழுப்பியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். வாக்குகளைப் பார்த்தால், இந்தத் தேர்தல் அதிமுகவுக்கு ரொம்பவே முக்கியமான, வாழ்வா சாவா போராட்டமாகும். அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை விட்டுட்டு தவெகவுக்குப் போய் நிற்கும் வேட்பாளர்கள் மரகதம் குமாரவேல், சத்தியபாமா இருவரும் வெற்றி பெற்றுவிட்டால், அது எடப்பாடி பழனிசாமிக்கு செம அடியாக இருக்கும். |
|
எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சிவி சண்முகம், வேலுமணி போன்றோர், தவெகவுக்கு வருவதற்கு ரெடியாக உள்ளனர்.. போதாக்குறைக்கு தவெக வேட்பாளர்கள் 2 பேரும் ஜெயித்துவிட்டால், அதிமுகவிலிருந்து இன்னும் பலபேர் தவெக பக்கம் தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறது.. இதையெல்லாம் சமாளிக்கவே, எடப்பாடி களத்தில் இறங்கி அதிரடியாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். வழக்குகளில் தாமதம், கட்சியை உடைக்கும் குதிரை பேரம்னு அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தையே அதிரவைக்குது. திமுகவுக்கும் பிரஷர் மறுபக்கம், திமுகவுக்கும் இந்தத் தேர்தல் தனது பலத்தைக் காட்டவேண்டிய அவசியத்தை உருவாக்கியிருக்கிறது. விஜய் தன் பிரச்சாரத்தில், "போட்டியே எங்களுக்கும் திமுகவுக்கும் மட்டும்தான்"னு வழக்கம் போல பேசி கொண்டிருக்கிறார். தன்னை பற்றின இரக்கத்தை மக்களிடம் பரப்பி கொண்டே வருகிறார். தன் அம்மா பற்றி திமுக தரப்புல தவறாக பேசுவதாக சொல்லி மக்களின் பெற அவர் முயல்கிறார். ஆனால் அந்த விமர்சனத்தை வைத்தது நயினார் நாகேந்திரன். பாஜக பற்றி சொல்லத் திராணியில்லாமல் பழியை திமுக மீது திருப்புகிறார் விஜய். எதிர்க்கட்சிகளை நேருக்கு நேர் எதிர்க்கிறதுதான் முறையான அரசியல். அதைவிட்டுட்டு எல்லாவற்றிற்கும் திமுகவைக் குறை சொல்வது சரியில்லை. அதேபோல ஆரம்பத்தில் இருந்த அந்த உற்சாகம் இப்போது விஜய் பேச்சில் இல்லை.. பழைய கதைகளையே பேசிக்கிட்டு இருக்கார்.. 4 மாதத்தில் மக்களுக்கு என்ன செஞ்சோம்னு சொல்லாமல் மறுபடியும் திமுகவை எதிர்ப்பதிலேயே குறியா இருப்பது பலருக்கும் சலிப்பை தந்துவிட்டது. மக்களின் மனநிலையை பார்த்தால், தவெக அரசு மீது கடுமையான கோபமும் அதிருப்தியும் உள்ளது.. ஆனாலும், விஜய் மீது தமிழ்நாட்டில் இருக்கிற கிரேஸ் இன்னமும் குறையவில்லை. அது ஒன்றை நம்பித்தான் தவெக காய் நகர்த்தி வருகிறது. மரகதம் குமாரவேல் எதிர்க்கட்சியாகவே இருந்துவிட்டால் 5 ஆண்டுகள் எதையும் சாதிக்க முடியாது என்பதற்காகவும், ஆளுங்கட்சியில்தான் எம்எல்ஏக்கள் கான்ட்ராக்ட் எடுப்பது, ரேஷன் கடை, டாஸ்மார்க் மற்றும் ஆசிரியர், மருத்துவர் டிரான்ஸ்பர் போன்ற விஷயங்களில் தங்களது காரியங்களைச் சாதிக்கவும் பணம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதற்காகவும் மரகதம் குமார்வேல் போன்றோர் கட்சி மாறி ஆளுங்கட்சி பக்கம் செல்கிறார்கள். அதனால்தான், மரகதம் குமாரவேல் மீது தொண்டர்கள் வெறுப்பில் உள்ளனர்.. அதேசமயம், அதிமுகவின் கீழமட்ட நிர்வாகிகள் பலரும் முன்கூட்டியே தவெக பக்கம் தாவிவிட்ட காரணத்தினால், இப்போது களத்தில் அதிமுகவுக்கு வேலை செய்ய ஆட்களே இல்லை. இந்த தேர்தலில், பிரச்சார களத்தில் தவெகவினர் ஒரு புதிய யுக்தியை கையாள்கிறார்கள். அதிமுகவும் திமுகவும் சேர்ந்து கொண்டு "அண்டர்டீலிங்" செய்கிறார்கள் என்கிறார்கள். இது எதற்காகவென்றால், நாளைக்கு தேர்தல் முடிவு தங்களுக்கு எதிராக வந்தால் திமுக-அதிமுக அண்டர்லீங் காரணத்தை சொல்வதற்காக இப்போதே அஸ்திவாரம் போடுகிறார்கள்.. எடப்பாடி பழனிசாமி அமைதி ஏன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை போட்டு, அதிமுகவின் ஓட்டுகளைக் குறிவைக்கிறார்கள்.. இதைப் பார்த்துகிட்டு எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. அன்று விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என்று சொன்னதுமே, ஜெயலலிதா எப்படி கொதித்தெழுந்தார்? ஆனால் இன்றைக்கு எடப்பாடி அமைதியாக இருப்பது அதிமுக தொண்டர்களை கொதிப்படைய செய்துள்ளது. . மொத்தத்தில், இந்த இடைத்தேர்தல் முடிவு என்னவாகப் போகிறது? தவெகவுக்கு இது ஒரு அக்னிப் பரிட்சை, அதிமுகவுக்கு இது தன் பலத்தைக் காட்டும் போராட்டம். உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. விஜய் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள ஏமாற்றம் எதிர்ப்பு வாக்குகளாக மாறுமா? அல்லது விஜய்யின் ஈர்ப்பு அவர்களைக் காப்பாற்றுமா? பொறுத்திருந்துதான் பார்க்கணும்" என்றார். |