பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!

23.04.2024 07:34:53

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்‘ என்ற நுண்ணுயிர் இனம்காணப்பட்டதையடுத்து பாகிஸ்தானுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

பாகிஸ்தானில் இருந்து ரஷ்யாவுக்கு அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி கடந்த நிதியாண்டில் மாத்திரம் சுமார் 40 லட்சம் தொன் அளவுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது பாகிஸ்தானின்  பொருளாதாரத்தில் பாரிய பங்கு வகிக்கின்றது.

இந்நிலையிலேயே பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர் இருப்பது  கண்டறியப்பட்டதோடு இது ரஷ்யாவின் உணவு பாதுகாப்பு தரத்தை மீறுவதாகவும்  குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து  பாகிஸ்தான் தூதரை அழைத்து இது தொடர்பாக கடும் கண்டன் தெரிவித்த ரஷ்யா,  இதேநிலை தொடர்ந்தால் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும் எனவும்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2019-ம் ஆண்டிலும் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related