இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி 298-5

09.07.2022 09:33:14

இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலிய அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது ஆட்டநேர முடிவில், ஸ்டீவ் ஸ்மித் 109 ஓட்டங்களுடனும் அலெக்ஸ் கெர்ரி 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

காலி சர்வதேச மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்ரேலிய அணி சார்பில், உஸ்மான் கவாஜா 37 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 5 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 104 ஓட்டங்களையும் ட்ராவிஸ் ஹெட் 12 ஓட்டங்களையும் கெமரூன் கிறீன் 4 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சீல், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித மற்றும் ரமேஸ் மெண்டிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 5 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டத்தை அவுஸ்ரேலிய அணி இன்று தொடரவுள்ளது.