
நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு.
சென்னைக்கான துணைத் தூதுவராக கேதீஸ்வரன் கணேசநாதன் (Dr. Ganesanathan Geathiswaran) நியமிக்கப்பட்டதில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை என வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஆதரவாளரான கேதீஸ்வரன் கணேசநாதன் சென்னைக்கான இலங்கையின் துணை தூதுவராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.
எனினும் இது இராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சில் பல்வேறுபட்ட விமர்சனங்களைத் தூண்டியுள்ளது என சில பத்திரிகை ஊடகங்கள் மேற்கொள்காட்டியுள்ளன.
நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு
முன்கூட்டிய இராஜதந்திர அல்லது வெளிநாட்டு சேவை அனுபவம் இல்லாத கேதீஸ்வரன் இலங்கையின் மிக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டுப் பதவிகளில் ஒன்றுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் இந்த நியமனம் குறித்து வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது தூதுவர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கின்றது.
அதற்கமைய தூதுவர்களை ஜனாதிபதி நியமித்து அனுப்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.