பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.

16.10.2026 15:34:17

டைம்ஸ் நெட்வொர்க் தேசிய பாதுகாப்பு மாநாடு 2026-ல் உரையாற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் அமைதிக்கான முயற்சியை பலவீனமாக நினைக்க வேண்டாம் என தெரிவித்த அவர், நாட்டின் எல்லைமீறல்களுக்கு பலத்த பதிலடி கொடுக்கப்படும் என்றார். 

மேலும், 2014-க்கு பிறகு தீவிரவாதிகளின் ஆயுட்காலம் குறைந்துள்ளதாகவும், பாதுகாப்பு படைகள் அவர்களின் ஊற்றுக்கண்களையே வேரோடு அழித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், 2026-ஆம் ஆண்டிற்கு ரூ. 2 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதே மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் முக்கியத்துவம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு சவால்கள் குறித்து விளக்கினார். 

குறிப்பாக, கடற்படையின் நவீன ட்ரோன் தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தக பாதைகளின் பாதுகாப்பு குறித்து விரிவாக பேசப்பட்டது. 'விக்சித் பாரத் 2047' இலக்கை நோக்கி செல்லும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மையமாக கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது.