மூழ்கும் படகில் ஏறி சாகத் தயாரில்லை!

12.09.2024 09:27:29

மூழ்கும் படகில் ஏறி தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கீதா சமன்மலி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

    

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தமை குறித்து கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

“நான் அரசாங்கத்திடம் இருந்து எதையும் வாங்கவில்லை, அதனால் எனக்கு கடனும் இல்லை, பயமும் இல்லை. நான் சுதந்திரமான முடிவுகளை எடுக்கிறேன். நான் கீதா குமாரசிங்க. நான் இந்நாட்டின் கலைஞர்களின் மனங்களை வென்றவள். அவரை ஜனாதிபதியாக்குவதற்காக நானும் அவருக்கு வாக்களித்தேன்.

நான் பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்கினால் தான் அவர் இன்று அந்த கதிரையில் இருக்கின்றார். நேற்றைய நிலவரப்படி குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சில் இருந்து என்னை நீக்கினார். எத்தனை நாட்களுக்கு.. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன.

வெற்றி பெற சஜித்திடம் சென்றீர்கள் அல்லவா என்று கேட்கிறார்கள். நான் ஆம் என்றேன். வெற்றி பெறுவதால் தான் சென்றேன். மூழ்கும் படகில் சென்று தற்கொலை செய்து கொள்ள விரும்பவில்லை. ஆம், நான் வெற்றி பெறுவேன் என எனக்குத் தெரியம். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. " என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்து, கடந்த 9ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.