விக்ரமின் 'தங்கலான்' படம் பற்றிய புதிய தகவல்!

08.03.2024 07:00:00

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 
 

 

சமீபத்தில் தங்கலான் பட ஷூட்டிங் நிறைவடைந்தது. இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல்  12 ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்பட்ட நிலையில் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என தெரிகிறது.
 

அதாவது, தங்கலான் படத்தின் VFX நேர்த்தியாக வரவேண்டும் என்பதற்காக, இக்குழுக்கு நேரம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தரமாக வரவேண்டும் என்பதற்காக ரிலீஸ் தேதி இன்னும் பல மாதமாகும் என தெரிகிறது

இந்த நிலையில், இப்பட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், ரூ.20 கோடி அதிகமாக செலவாகியுள்ளதால் தன் சொந்த பணத்தை போட்டு படமெடுத்துள்ளதால்  கூடுதல் செலவான தொகையை தரவேண்டும் என தயாரிப்பாளரிடம் பா.ரஞ்சித் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் மார்க்கெட் வீழ்ச்சியடைந்துள்ளதாலும் இப்படத்திற்கு டிஜிட்டல் வியாபாரம் சிக்கல் உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
 

அதன்படி, தங்கலான் படத்தின் சாட்டிலைட் விற்பனை ஆகவில்லை என்பதால்தான் இப்படத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது  என தகவல் வெளியாகிறது.

 

இப்படம் எப்போது வெளியாகும்? இப்பட ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும்  என இப்பட அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திரும் நிலையில்  இப்படம் தியேட்டரில் ரிலீஸின்போது மிகப்பெரிய சாதனை படைக்கும் என நெட்டிசன்களும் விக்ரம் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.
 

ஏற்கனவே இப்பட டிரெயிலர் வெளியாகி விக்ரமின் நடிப்பை பார்த்து எல்லோரும் மிரண்ட நிலையில், அவரது முமுமையாக நடிப்பை இப்படத்தில் பார்ர்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.