ராமநாதபுரம் வரலாற்றில் முதல் தொழில் திட்டம்.
|
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இனி ஹேப்பிதான்.. தென் தமிழகத்தின் வறட்சி மண்டலம் என்றும், வேலைவாய்ப்புகளுக்காக இளைஞர்கள் பெருநகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இடம் பெயரும் பூமி என்றும் அறியப்பட்ட ராமநாதபுரம் மண்ணில், இதுவரை இல்லாத வகையில் ஒரு வரலாற்று சாதனை அரங்கேறியுள்ளது. இன்றைய வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் மிக முக்கிய நகர்வு ஒன்று சாத்தியமாக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம். |
|
சென்னையில் இன்று நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.. இதில், 55 திட்டங்கள் புதிய திட்டங்களாகவும், 50 திட்டங்கள் ஏற்கனவே செயல்பட்டுவரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களாகவும் உள்ளன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பிரித்து வழங்கப்பட உள்ளன. தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகலன் உற்பத்தி சார்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' மற்றும் 'அக்னிகுல் காஸ்மோஸ்' நிறுவனங்களின் பிரம்மாண்ட முதலீடுகள், கிருஷ்ணகிரியில் மின்சார வாகன உற்பத்திக்கான அல்ட்ராவயலட் நிறுவனத்தின் பிரவேசம், காஞ்சிபுரத்தில் ஜெ.கே. டயர் மற்றும் டைம்லர் நிறுவனங்களின் விரிவாக்கங்கள் என தமிழகம் முழுவதும் தொழில் அலை வீசத் தொடங்கியுள்ளது. இன்றைய மாநாட்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பன்னாட்டு முதலீடுகள் குவிகின்ற போதிலும், அனைவரின் பார்வையையும் சட்டென்று தன் பக்கம் திருப்பியிருப்பது ராமநாதபுரம் மாவட்டம் தான். ஆமாம்.. வரலாற்றிலேயே முதன்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு தொழில் திட்டம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக வறண்ட பூமியாகவும் வேலைவாய்ப்புகளுக்கு பஞ்சமான பகுதியாகவும் அறியப்பட்ட மாவட்ம்தான் ராமநாதபுரம்.. இதுவரை காய்ந்து கிடந்த இந்த மண்ணில், இனி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்கால வாழ்வாதாரம் செழித்தோங்க போகிறது! ராமநாதபுரம் மட்டுமின்றி, தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் முதன்முறையாக புதிய தொழிற்கூடங்களையும், பிரம்மாண்ட முதலீடுகளையும் பெறவுள்ளன. குறிப்பாக விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை (Aerospace and Defence), மின்சார வாகன உற்பத்தி (Electric Vehicles), உயர்தொழில்நுட்ப மின்னணுவியல் (Electronics) மற்றும் நவீன உள்கட்டமைப்பு (Infrastructure) ஆகிய வளர்ந்து வரும் முன்னணி துறைகளை சேர்ந்த சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் இந்த மாவட்டங்களில் தங்கள் தொழில் பிரிவுகளைத் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளன. நீண்டகாலமாக வேலைவாய்ப்புக்காக சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து வந்த தென் தமிழக இளைஞர்களுக்கு, இந்த நடவடிக்கை ஒரு மிகப்பெரிய நற்செய்தியாக அமைந்துள்ளது. சொந்த மாவட்டத்திலேயே தகுதிக்கேற்ற நல்ல வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. ராமநாதபுரத்தில் களமிறங்கும் இந்த முதல் தொழில் திட்டமானது, அந்த பகுதியின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், பிற தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய தூண்டுகோலாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது..!! |