திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு!

08.03.2024 14:55:07

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு இன்று இடம்பெற்று வரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

 

அந்தவகையில் இன்றைய தினம் உலகம் முழுவதும் இருந்து வருகை தந்துள்ள, சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீஸ்வர ஆலயத்தினுள் உள்ள மகா சிவலிங்கத்திற்கு நீர்வார்த்து நெய் விளக்கு ஏற்றி  தமது வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி சபையின் ஏற்பாட்டில்
பல்வேறு பட்ட இந்து கலாச்சார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. .