இன்று முதல் மீண்டும் செம்மணி அகழ்வு.

25.08.2025 08:19:31

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கிய நிலையில், கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

இதன் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேவேளை கடந்த 06ஆம் திகதி வரையில் மொத்தமாக 41 நாள்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 147 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது