நாடு கடத்தப்படவுள்ள பெலருஸூக்கான பிரான்ஸ் தூதுவர்!
18.10.2021 14:08:41
பெலருஸூக்கான பிரான்ஸின் தூதுவர் அந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.
அவரது நற்சான்று பத்திரத்தை பெலருஸ்ஸின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகசென்கோவிடம் கையளிக்காமையினாலேயே அவர் இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆறாவது முறையாகவும் பெலருஸூக்கான தூதுவராக அவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அவரது நியமனத்தை அந்த நாடு ஏற்றுக்கொள்ளவில்லை.
அவர் மீதான மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக பெலருஸ் இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினத்திற்குள் அவர் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.