ஜெனீவாவிலிருந்து இலங்கை உயர் நீதிமன்றிற்கு பறந்த அவசர கடிதம் !

08.07.2021 09:06:53

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனுவை, இணையம் ஊடாக மேற்பார்வை செய்ய தமக்கு சந்தர்ப்பம், வசதிகளைச் செய்து தருமாறு நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் உயர் நீதிமன்ற பதிவாளரை எழுத்துமூலம் கோரியுள்ளது.

நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்டின் சுங்கொங் கையெழுத்திட்டு கடந்த 6 ஆம் திகதி ஜெனீவாவிலிருந்து இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து பரிஸ்டர் மார்க் ட்ரொவெல் எனும் அதிகாரிக்கு வழக்கை அவதானிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அந்த வசதிகளைச் செய்து கொடுக்குமாறே குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.