தலிபான்களுக்கு மனோ கணேசன் அறிவுரை !

17.08.2021 11:02:37

"புலிகளுடன் எங்களுக்கு தொடர்பிருக்கவில்லை" என தலிபான் பேச்சாளர் இன்று கூறுவது இலங்கையில் ஒருநாள் செய்தி அவ்வளவு தான் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது இங்கே பெரிதாக யாரையும் மகிழ்ச்சியிலோ, கவலையிலோ ஆழ்த்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் சம பல உறவுகளை பேணுவது தலிபான்களுக்கு உலக அங்கீகாரத்தை பெற்று தரும்.

இதுவே ஆப்கன் மக்களின் உடனடி தேவையான நிம்மதியை பெற்றுத்தரக்கூடிய, உள்நாட்டு, வெளிநாட்டு சூழலை ஏற்படுத்தும்.

இடைக்காலத்தில் வந்து போன தலிபான்களின் ஆட்சியும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கவில்லை.