இத்தாலியிலும் கோட்டாபய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

04.07.2022 09:00:00

இத்தாலியின் பிரேசியா நகரில் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“அடக்குமுறைக்கு அடிப்பணிய மாட்டோம்: கோட்டா, ரணில் அரசாங்கத்தை உடனடியாக வீட்டுக்கு அனுப்புவோம்” என்ற கோஷத்துடன் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இத்தாலிய தேசிய நாடகக் குழு, இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் அடக்குமுறைக் கொள்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து நாடகமொன்றையும் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த எதிர்ப்பு நாடகத்தில் இலங்கையைச் சேர்ந்த நடிகர்களும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முழுவதும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் புலம்பெயர் இலங்கையர்களும் தாங்கள் வாழும் நாடுகளில் இருந்து  இலங்கை அரசுக்கு எதிரான தமது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.