அரசியல் தூண்டுதலின் அடிப்படையில் குழப்பம்.

28.05.2026 08:37:02

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள சுப்பு பிள்ளை தோட்டம் ஹவுசிங் போர்டு வட்டம்–169 திட்டம் தொடர்பான விவகாரம் தற்போது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக தரப்பும் மா. சுப்பிரமணியன் ஆதரவாளர்களும் பொய்யான தகவல்களை பரப்புவதாக தவெக வழக்கறிஞர் சத்யகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவு இதோ: 

 

 சைதாப்பேட்டை ஹவுசிங் போர்டு விவகாரம்: அரசியல் செய்யும் மா. சுப்பிரமணியன்.

 

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள சுப்பு பிள்ளை தோட்டம் ஹவுசிங் போர்டு வட்டம்–169 திட்டம் தொடர்பாக அண்மையில் பல்வேறு தகவல்கள் திமுக ஐ டி விங் மூலமும் சமூக வலைதளங்களில் மாசுவின் ஆதரவாளர்கள் மூலமும் திமுக வின் சன் டிவியின் மூலம் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். 

recommended by

BTC Income

Doe dit 15 minuten per dag en verdien € 300 per dag!

Meer weten

 

 

இந்த விவகாரம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களும் விவாதங்களும் எழுந்துள்ள நிலையில், ஹவுசிங் போர்டு விவகாரம் இவர்கள் செய்த ஊழல்கள் ஆதாரங்களுடன் வெளிகொண்டு வரப்படும்….

 

இந்த நிலையில், சைதாப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அருள் பிரகாசம், மக்கள் மத்தியில் நேரடியாக செயல்பட்டு தொகுதி பிரச்சினைகளை களத்தில் கவனித்து வருபவராக அறியப்படுகிறார். எளிமையான அணுகுமுறை, பொதுமக்களுடன் நேரடி தொடர்பு, மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளிடம் சென்றடைய வேண்டும் என்ற நிலைப்பாடு ஆகியவை அவரது அரசியல் செயல்பாட்டின் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன. தொகுதி வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நல பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

தற்போதைய நிர்வாகத்தில், சில அதிகாரிகள் மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் மற்றும் களையெடுப்புகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்நிலையில் சில முக்கியமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன:

• இந்த திட்டத்தின் கீழ் வீடு பெற்ற அனைவரும் உண்மையான பயனாளிகள்தானா?

• வீடுகள் முறையான தகுதியான பொதுமக்களிடம் சென்றுள்ளதா?

• பயனாளிகள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்?

• இன்று குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் அரசியல் தூண்டுதலின் அடிப்படையில் செயல்படுகிறார்களா?

 

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் தகவல்களுக்கு விரைவில் முழுமையான ஆதாரங்களுடன் பதில் வழங்கப்படும் என்றும், உண்மை விரைவில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகம் மூலம் பொய்யாக செய்திகளை பரப்புவோர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரு. அருள் பிரகாசம் அவர்கள் வள்ளலார் கொள்கைகளைப் பின்பற்றி செயல்பட்டு வருபவராகவும் அறியப்படுகிறார். “பசியற்ற சமுதாயம்” என்ற உயரிய நோக்கத்தை முன்னிறுத்தி, தினமும் சுமார் 300 பேருக்கு அன்னதானம் வழங்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மனிதநேயம், சேவை மனப்பான்மை மற்றும் சமூக அக்கறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. மேலும், அவரை நேர்மை, ஒழுக்க நெறிகள் மற்றும் உயர்ந்த வாழ்வியல் மதிப்புகளைப் பின்பற்றி செயல்படுபவர் என அவரது ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.