
கவர்ச்சிக்கு மாறிய நிதி அகர்வால்
13.11.2021 09:47:18
ஹிந்தி சினிமாவில் அறிமுகமான நிதி அகர்வால் தென்னிந்திய மொழிகளில் வேகமாக முன்னேறி வருகிறார். தமிழில் ஈஸ்வரன், பூமி என 2 படங்களில் நடித்தார். அடுத்து உதயநிதியுடன் நடித்து வருகிறார். தமிழில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதையடுத்து அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்க நிதி அகர்வால் ஒப்பந்தமாகி வருகிறார். சமூக வலைத்தளத்தில் தீவிரமாக இருக்கும் நிதி அகர்வால், தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை நடிகை நிதி அகர்வால் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகின.