ரஞ்சித் ஐ.தே.கவுடன் மீண்டும் இணைவாரா?
03.06.2024 08:04:36
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடா்பான தீா்மானத்தினை இடைநிறுத்தி வைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று காலை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியினால் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கட்சி உறுப்புரிமை 2020 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், ரஞ்சித் மத்தும பண்டாரtின் கட்சி அங்கத்துவம் தொடர்பான ஒழுக்காற்று விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.