எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

08.03.2024 08:21:59

எதிர்க்கட்சித் தலைவர்களுடான கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பொன்றை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை, பாராளுமன்றத்தில்  அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  எதிர்வரும் திங்கட்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது