113வது பிறந்த நாள் கொண்டாடி சாதனை

30.05.2022 08:01:15

உலக அளவில் அதிக வயதான நபர் என்ற சிறப்பை பெற்ற, ஜூவான் நேற்றுமுன்தினம் 113வது பிறந்த நாளை கொண்டாடினார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை சேர்ந்தவர் ஜூவான் விசென்டே பெரெஸ் மோரா. கடந்த 1909ம் ஆண்டு மே 28ம் தேதி பிறந்தவர். உலகின் மிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் தன்னுடைய 113வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார். குடும்பத்தினர், உறவினர்கள், குடும்ப நண்பர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.