நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உண்மையே!

17.06.2024 09:22:54

“நீட் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக” மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன் முறையாக  ஒப்புக் கொண்டுள்ளார்.

 

மேலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டோருக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் கல்வித்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இதுவரை காலமும் நீட் நுழைவுத் தேர்வுகளில் எந்தவித முறைகேடுகளுமே நடக்கவில்லை என சாதித்து வந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தற்போது முதல் முறையாக நீட் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை நீட் நுழைவுத் தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு, கர்நாடகா அரசுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது