அடுத்த 20 வருடத்திற்கு திமுக தான் ஆட்சியில்..

20.05.2022 15:30:18

மு.க.ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் அடுத்த முதல்வர் என தமிழகத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓர் ஆண்டு சாதனை முழக்க கூட்டத்தில் பேசிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

நம்மை எதிர்த்து நிற்க யாரும் இல்லாததால் தமிழகத்தில் அடுத்த 20 வருடத்திற்கு திமுக தான் ஆட்சியில் இருக்க போகிறது.

அதிமுக-வில் உட்கட்சி பிரச்சனை நடக்கிறது, இருவரும் (ஓபிஎஸ்-ஈபிஎஸ்) இருவரும் சேர்ந்து கூட அறிக்கை வெளியிடுவதில்லை.

ஆனால், திமுக-வில் ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ, அதை அடிமட்ட தொண்டன் முதல் மேலே இருப்பவர்கள் அனைவரும் கேட்பார்கள்.

கருணாநிதி இருக்கும் போது அவர் சொன்னதை கேட்டோம், அவர் மறைந்த பிறகு ஸ்டாலின் சொல்வதை கேட்கிறோம், ஸ்டாலினுக்கு பிறகு 6 வாரிசுகள் தயாராக இருக்கின்றன.

அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், அவருக்கு அடுத்தது உதயநிதி தயாராக இருக்கிறார்.