‘பீஸ்ட்’ பட பிரபலம்

18.07.2021 15:39:18

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் பணியாற்றி வரும் பிரபலம், அடுத்ததாக ஷங்கர் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர், ஜானி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்துக்கு நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அவர் அடுத்ததாக பணியாற்ற உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ள தெலுங்கு படத்திற்கு நடன இயக்குனராக ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

ஏற்கனவே ஷங்கர் இயக்கிய பாய்ஸ், காதலன் போன்ற படங்களில் டான்ஸராக பணியாற்றியுள்ள ஜானி, தற்போது முதன்முறையாக அவரது படத்தில் நடன இயக்குனராக பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.