லண்டனில் பயங்கர கார் விபத்து இலங்கை தமிழர் உயிரிழப்பு!

24.05.2026 12:00:00

பிரித்தானியாவில் நடந்த மோசமான சாலை விபத்தில் இலங்கை வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் லண்டனில் நடந்த கோரமான சாலை விபத்தில் இலங்கை சேர்ந்த தமிழர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் இரண்டு பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை லண்டன் சவுத் ஹாரோ பகுதியில் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் உட்பட மூன்று பேர் பயணித்த கார் ஒன்று மரத்தில் மோதியதில் இந்த விபத்தில் ஏற்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் இலங்கை சேர்ந்த 29 வயது இளைஞர் உயிரிழந்து இருப்பதுடன் 20 மற்றும் 25 வயதுடைய இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் சவுத் ஹாரோ பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.