நடிக்க முடியுமா ?
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.
'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'கட்டா குஸ்தி' படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தனர். 'கட்டா குஸ்தி' படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசியதாவது, "இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த கதை கூறும் போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என்ற பயம் இருந்தது. அதனால் முடியாது என்று கூறிவிட்டேன். மூன்று வருடங்களுக்கு பின்னர் மறுபடியும் இந்த கதை வந்த போது இதை கண்டிப்பாக பண்ண முடியாது என்று நினைத்ததிலிருந்து முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.
இந்த கதாபாத்திரம் நன்றாக இருந்தது கதாபாத்திரத்தை விட கதை மிகவும் நன்றாக இருந்தது. அதனால் இந்த கதையை ஒப்புக் கொண்டேன்" என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.