தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவுகள் பிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்பம் !

28.05.2021 12:23:26

 

பிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று (வியாழக்கிழமை) காலை இத்தகவலை சுகாதார அமைச்சகம் அறிவித்ததையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக முன்பதிவுகளளை மேற்கொண்டு வருகின்றனர்.

இணையத்தளம், மருத்துவமனை, மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் விற்பனை நிலையங்களூடாகவும் மற்றும் தொலைபேசி செயலியூடாகவும் முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

மே 31ஆம் திகதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.