பொலிஸ் கஸ்டடியில் உயிரிழந்த புலம்பெயர் பணியாளர்!
|
புலம்பெயர் பணியாளர் ஒருவர் பொலிஸ் கஸ்டடியில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். Mauritania நாட்டவரான El Hacen Diarra, (35) என்பவரை இம்மாதம், அதாவது, ஜனவரி மாதம் 14ஆம் திகதி பொலிசார் முரட்டுத்தனமாக கைது செய்துள்ளார்கள். பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்ட Diarra, மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டார். |
|
மருத்துவ உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். Diarraவின் மரணத்தைத் தொடர்ந்து பொலிஸ் வன்முறைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு நேற்று பாரீஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பொலிசார் Diarraவின் மரணம் தொடர்பில் துறைசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையில், பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Laurent Nunez, சம்பந்தப்பட்ட பொலிசாரை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துவிட்டார். அந்த பொலிசார் தவறிழைத்துள்ளார்கள் என்பதற்கு தெளிவான ஆதாரம் கிடைக்கும் வரையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அவர் கூறியுள்ளார். |