இலங்கை பயண தடையை விலக்கிய பிரிட்டன்

27.12.2022 20:34:51

இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை ஊக்குவிக்கும் முகமாக பிரிட்டன் பத்திரிகை ஒன்று விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

குறைந்த செலவுடனான விசேட விடுமுறை பொதி வழங்கப்படுவதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் பிரிட்டனின் பிரபல பத்திரிக்கையான Daily Mail உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

இலங்கையில் வழங்கப்படும் சொகுசு சுற்றுலா பொதி

இலங்கையில் தற்போது வழங்கப்படும் சொகுசு சுற்றுலா பொதியை பெற்றுக்கொள்வதற்காக மிக குறைந்த தொகையை ஒதுக்குவதற்கான சந்தர்ப்பம் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட காலத்திற்கு பின்னர் கிடைக்கும் சந்தர்ப்பமாகும்.

ஆர்ப்பாட்டம் மற்றும் உணவு பற்றாக்குறை முதலான அச்சத்தின் காரணமாக வருடத்தின் முதல் காலாண்டுப்பகுதியில் பிரிட்டன் தனது சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது.

 

பயண தடையை விலக்கிய பிரிட்டன்

இருப்பினும், பிரிட்டிஷ் அரசாங்கம் தனது அறிவிப்பை விலக்கிக் கொண்டுள்ளது. தனது சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு சுற்றுலா செல்வதை பிரிட்டன் தற்பொழுது ஊக்குவித்து வருகிறது.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்குச் செல்வது வசதியானது என்றும் அந்த பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு செல்வதற்காக 36 மணித்தியாலம் என்ற குறுகிய காலப்பகுதி டிஜிட்டல் முறைக்கு அமைவாக விசாவை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த பத்திரிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.