ஜெர்மனி ரயிலில் கத்திக்குத்து தாக்குதல்

07.11.2021 14:47:24

 ஜெர்மனியில் பவேரியா மாவட்டத்தில் உள்ள ரெஜென்ஸ்பர்க் - நியூரம்பெர்க் இடையே, இந்நாட்டின் அதிவிரைவு ஐசிஇ ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் பயணிகளை தாக்கினார். எதிர்பாராத இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், அலறியபடி ரயில் பெட்டிக்குள்ளேயே அங்குமிங்குமாக ஓடினர். இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர். அடுத்த ரயில் நிலையத்துக்கு வந்ததும் ரயில் நிறுத்தப்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கத்தியால் தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவர் அரபு நாட்டை பூர்வீகமாக கொண்ட வாலிபர். 27 வயதான அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.