2ஆவது நாளாகவும் தாதியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்

02.07.2021 09:45:34

 

தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல், பதவி உயர்வு  உள்ளிட்ட முக்கிய  கோரிக்கைகளை முன்வைத்து, 2ஆவது நாளாகவும் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை தாதியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.

தாதியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட சுகயீன விடுமுறைப் போராட்டம், இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை திருகோணமலை பொது வைத்தியசாலையில் செய்தி சேகரிப்பதற்கு அங்கு பணியாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.