கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையாக மாட்டேன்! -சட்டமா அதிபர்

27.02.2024 08:05:18

”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையாகப்போவதில்லை” என சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

 

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி போராட்டம் இடம்பெற்ற போது, ஊரடங்குச் சட்டம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் பிரிதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மாற்றுக் கொள்கை மையம் உள்ளிட்டவற்றால் தாக்கல் செய்யப்பட்ட 06 மனுக்கள் தொடர்பில் தீர்ப்பளிக்கப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்கிரமா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Gotabaya Rajapaksa