பேஸ்புக் பதிவு குறித்து அர்ச்சுனாவிடம் விசாரணை!

05.08.2025 10:06:15

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டதாகக் கூறினார். பேஸ்புக்கில் இட்ட ஒரு பதிவையடுத்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.