முக்கிய மசோதாக்கள் இன்று தாக்கலா?
நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடரின் கடைசி நாட்களில் தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் தங்களது அனைத்து எம்பிக்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை எட்ட என்டிஏ கூட்டணி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக மக்களவை எண்ணிக்கையை 816 ஆக உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடம் சுமார் 1,000 உறுப்பினர்களை அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த தொலைநோக்குத் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி தரப்பில் ஒற்றுமையின்மை நிலவுவது ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாறியுள்ளது.