செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார் பொன்சேகா

20.03.2024 14:31:10

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

பீல்ட் மார்ஷல் பொன்சேகா கூட்டத்தில் எதுவும் பேசவில்லை என்றும், மற்றவர்கள் சொல்வதை மட்டும் செவிமடுத்தார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பொன்சேகா சமீபத்தில் SJB யில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.