கிரிஷ் கட்டிடத்தில் மீண்டும் தீவிபத்து!

08.02.2025 09:32:00

கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடத்தில் நேற்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டிடத்தின் 24 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுதீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் குறித்த கட்டிடத்தின் 35 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.