கட்டடம் இடிந்து விழுந்து - 4 பேர் பலி

24.11.2021 13:09:49

சீனாவின் ஜியாங்ஸி மாகாணம், கன்ஜியாங் நகரில் மருந்து நிறுவன தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், நான்கு தொழிலாளிகள் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், படுகாயம் அடைந்த தொழிலாளிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.