தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்குத் தடை! தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்குத் தடை!

15.02.2024 14:47:16

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இன்று மதியம் தடையுத்தரவு விதித்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த  உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றமும் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.