குதிக்கால் வெடிப்பு பிரச்சனையா...
30.01.2023 22:59:16
ஆண்களாக இருக்கட்டும் சரி பெண்களாக இருக்கட்டும் சரி அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை குதிகால் வெடிப்பு ஆகும்.
குளிர் காலத்தில் அதிகமாக ஏற்படும் இந்த குதிக்கால் வெடிப்பால் சிலருக்குக் காலில் ரத்தக் கசிவு ஏற்படுவதோடு பலர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
குதிகால் வெடிப்புக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் இது நிரந்தரமாக போகாது.
இருப்பினும் இதனை எளியமுறையில் கூட போக்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.