இ.போ.ச ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

11.06.2022 06:05:54

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதன முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து நாட்டின் பல பாகங்களிலும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.