தடையை உடைத்து தமிழகத்தில் பாய்ந்த காவிரி.
26.08.2026 08:42:10
|
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்காமல் இழுத்தடித்து வந்தது. ஆனால், கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் வேறு வழியின்றி தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. விரைவில் அணை திறக்கப்படலாம் என்றும், இந்த நிகழ்வில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
|
அணையை திறக்க குறைந்தபட்சம் 90 அடி தண்ணீர் அவசியம். நேற்றிரவு நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 88.43 அடியாக இருக்கிறது. அணைக்கான நீர் வரத்து சீராக இருப்பதால், டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக விரைவில் அணை திறக்கப்படும் என்றும் இந்த நிகழ்வில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பார் என்றும் சொல்லப்படுகிறது. |