பீஸ்ட் படத்தை தவறவிட்ட மிஷ்கின்

18.08.2021 06:54:50

மாஸ்டர் படத்தை அடுத்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் பூஜா ஹெக்டே, டைரக்டர் செல்வராகவன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆக்சன் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளார் நெல்சன்.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் டைரக்டர் மிஷ்கின் வில்லனாக நடிக்க இருந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க மிஷ்கினைத் தான் அழைத்தாராம் விஜய். முதலில் அதற்கு ஒத்துக் கொண்ட மிஷ்கின், அதையடுத்து தான் பிசாசு-2 படத்தை இயக்க வேண்டி இருந்ததால் தேதிகளை ஒதுக்க முடியாமல் விலகிக் கொண்டததாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பிறகு தான் அந்த வேடத்திற்கு செல்வராகவன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.