
இலங்கையில் புதிய நுளம்பு இனம்!
21.04.2025 11:33:59
இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த புதிய நுளம்பு இனம் மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். |
இந்த நுளம்பு இனமானது, கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ் (Culex (Lephoceraomyia) cinctellus) என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த நுளம்பு இனம் ஒரு முக்கிய வைரஸ் கடத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க தெரிவித்துள்ளார். |