ரொஹான் பெர்னாண்டோ SLT தலைவர் பதவியில் இருந்து நீக்கம்
20.07.2023 19:03:21
ரொஹான் பெர்னாண்டோ SLT தலைவர் பதவியில் இருந்து நீக்கம்
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு முதல் SLT இன் தலைவராக இருந்த ரொஹான் பெர்னாண்டோ, பணிப்பாளர் சபையினால் நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக SLT இன் சுயாதீன நிறைவேற்று அல்லாத பணிப்பாளர் ரயாஸ் மிஹுலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம், SLT நிர்வாகமற்ற ஒரு சுயாதீன இயக்குனராக, அனுபவமிக்க ரயாஸ் மிஹுலர் நியமிக்கப்பட்டார்.
அவர் இன்று முதல் புதிய பதவியில் செயற் படுவார்.