தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மன்னாரில் ஆரம்பம்!

19.03.2023 15:24:26

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(19) காலை மாவை சேனாதிராஜா தலைமையில் மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், கலையரசன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதனும் பல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் படத்திற்கு மாவை சேனாதிராஜா சுடர் ஏற்றி மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தி கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

கட்சியின் செயற்பாடுகள்

இதன் போது கட்சியின் கடந்த கால மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.