அதிமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட்?!.

20.03.2026 08:26:01

2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து முதலில் கூட்டணி அமைத்தது அதிமுக -  பாஜகதான். பல மாதங்களுக்கு முன்பே மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து இந்த அறிவிப்பு வெளியிட்டார்..
 

அதன்பின் ஒவ்வொரு கட்சிகளாக அதிமுக கூட்டணியில் இணைந்தது.. அன்புமணி தலைமையிலான பாமக, டிடிவி தினகரனின் அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகளும் அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. அதேநேரம் இதுவரை அதிமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை துவங்கவில்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில், சில முக்கிய தகவல்கள் வெளியே கசிந்துள்ளது. அதிமுக 165 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.. மேலும் பாஜகவுக்கு 31 தொகுதிகளும், பாமகவுக்கு 17 தொகுதிகளும் ஒதுக்க அதிமுக திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது..

அதோடு அமமுகவுக்கு 9 தொகுதிகளும், தமகவுக்கு 4 தொகுதிகளும் இதுல கூட்டணி கட்சிகளுக்கு மீதமுள்ள தொகுதிகளும் பகிர்ந்து தரப்படும் என சொல்லப்படுகிறது..