அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு!
|
அதிமுக - பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு ஜிகே வாசன் இதனை கூறினார். ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டையில் தமாகா போட்டியிடுகிறது என்றும், இந்த முறை தாமரை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றும் ஜிகே வாசன் தெரிவித்தார். கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா, இந்த முறை ஒரு தொகுதி குறைந்து போட்டியிடுகிறது. |
|
கடந்த முறை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் இந்த கட்சி போட்டியிட்டிருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் பெரிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், மேலும் சில கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவது தொடர்பான ஆலோசனை நடந்து வருகிறது. பாஜக தலைவர்கள் ஆலோசனை அதற்காக அந்தந்த கட்சி நிர்வாகிகளும் தொடர்ந்து பேசி வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிட தொகுதி உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. போட்டியிட உள்ள 27 தொகுதிகள் எவை? என்பது குறித்த ஆலோசனையில் பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து, பியூஸ் கோயல் உள்பட பாஜக நிர்வகிகள், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் ஜான் பாண்டியன் ஆகியோர் அதிமுக எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விளக்கமாக கூறினார். ஜிகே வாசன் கூறியதாவது:- அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 5 தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஒட்டன் சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. தமாக இந்த தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் எத்தனை தொகுதியில் போட்டி 5 இடங்களிலும் முழுமையாக வெற்றி பெறுவோம். அதற்கான பணியை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இரண்டு நாட்களில் தொடங்குவோம். சைக்கிள் சின்னத்தில் ஏன் போட்டியிடவில்லை என்றால், தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளுக்கு இணக்கமாக வரவில்லை என்பதால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவில்லை" என்றார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை ஒரு தொகுதி குறைவாக போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில், இந்த முறை தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளது. |