ரஷ்யாவில் உணவுப்பொருள்களின் விலைவாசி கடுமையாக உயர்வு
24.03.2022 12:27:46
உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றனர்.
ஒரு மாத காலமாக உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இதுவரை ரஷ்யா தரப்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும். 15 ஆயிரம் பேர் காயமுற்றதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார மாற்றம் லேசாக ஆட்டி பார்த்தாலும் ரஷ்யாவில் மக்களை வெகுவாக பாதிக்க துவங்கி இருக்கிறது. எப்போதையும் உள்ளதை விட லிவிங் காஸ்ட் 14 சதவீதம் உயர்ந்துள்ளது. பண மதிப்பு 22 சதவீதம் குறைந்ததுடன் பண வீக்கமும் ஏற்பட்டுள்ளது.