
சினிமாவில் என்ட்ரி தரும் பிரபல சீரியல் நடிகை
19.11.2021 10:14:39
சின்னத்திரை நடிகையான வைஷ்ணவி அருள்மொழி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மலர் என்ற தொடரின் மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு சில தமிழ் தொலைக்காட்சி உலகில் அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக பிரபலமானார்.
தற்போது விஜய் டிவியின் முக்கிய தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2-வில் முக்கிய வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார். சின்னத்திரையில் ரசிகர்கள் பலரது மனங்களை கொள்ளை கொண்ட வைஷ்ணவிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுவரை சீரியல்களில் தன் நடிப்பினால் அசத்தி வந்த அவர் சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள சபாபதி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார். இந்த செய்தியை அண்மையில் பகிர்ந்த வைஷ்ணவிக்கு சகநடிகர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.