மஹிந்தவை சந்தித்த அரசியல்வாதிகள்.

11.09.2025 09:50:59

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று காலை அங்கு சென்றது.

ஜனாதிபதிகள் உரிமை நீக்கச் சட்டத்தின் விதிகளின் கீழ், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகள் அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்.

நேற்று (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வ குடியிருப்புகளில் வசித்து வரும் ராஜபக்ச இந்த உரிமையை இழந்தார்.