அமெரிக்காவில் இந்திய டாக்டர் சுட்டுக்கொலை
கொரோனா காலத்தில் பல உயிர்களை காப்பாற்றிய இந்திய டாக்டர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ், இவர் அமெரிக்காவில் இன்று காலை சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
1986 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்ற ரமேஷ் அமெரிக்காவில் ஒரு சில இடங்களில் பணிபுரிந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். அமெரிக்காவில் தான் கடந்த பல ஆண்டுகளாக இவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
மருத்துவ உலகில் 38 வருட அனுபவம் கொண்ட இவர் தான் படித்த பள்ளிக்கு சமீபத்தில் தான் 14 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று தான் வசித்த பகுதியில் ரமேஷ் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் தப்பி சென்ற நிலையில் சம்பவ இடத்திலேயே டாக்டர் ரமேஷ் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொலைக்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அமெரிக்காவில் கொரோனா பரவிய நேரத்தில் மிகவும் சிறப்பான சேவை செய்து அமெரிக்க அரசின் பாராட்டுகளை பெற்றவர் டாக்டர் ரமேஷ் என்பதும், இதன் காரணமாக இவர் வசிக்கும் பகுதியில் ஒரு தெருவுக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.