’மாமனிதனை தமிழினம் இழந்து விட்டது’
தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கு உரித்தான தனித் தேசமாக வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று மிகவும் ஆணித்தரமாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு படித்த கலாநிதியாக எடுத்துக்கூறிய மாமனிதன் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவை தமிழினம் இழந்து விட்டதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ். ஸ்ரீதரன் சபையில் அஞ்சலி செலுத்தினார்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகைம் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன ஈழத்தமிழர் உரிமை நிலைப்பாட்டில் இறுதிவரை ஒரே கொள்கையுடன் இருந்துவந்த முற்போக்கு அரசியல்வாதி. தமிழர் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கொள்கையை கடைப்பிடித்து அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலைவகித்தவர் .சிங்கள தேசிய இனத்தில் பிறந்தாலும் இனவாதம் இல்லாத பெருமனிதன் .அவ்வாறான ஒரு நல்மனிதனை இந்த தேசம் இழந்திருக்கின்றது என்றார்.